நடிப்பவர்கள் அரசியல்வாதி ஆனால்
பரவாஇல்லை.
அரசியல் வாதிகள் நடிக்கும் போதுதான்
கஷ்டமாக இருக்கிறது.
தேசியக் கொடிகள் படபடப்பது
காற்றினாலா
இல்லை
கறை படிந்த கரத்தால்
ஏற்றப் படுவதாலா ?
தேசத்தையே மாற்றிக் காட்டுகிறேன்
எனச் சவால் விட்டவர்கள்
தேசத்தை ஏ . . . . . . . . . . . . . . . .மாற்றிக் காட்டுகிறார்கள்.
சீரழிந்து கீழே விழுந்தவன்
திருப் புகழ் பாடி மேலேறினான்
நோவாது நுணங்காது
எம்பி எம்பி மேலேறியவர்களோ
திருப் புகழால் சீரழிகிறான் தமிழன் எனக்
கனிவாய் மொழிகிறார்கள்
தேவாரத்தால் தமிழன் சீரழிகிறான் எனும்
அற்புதக் கண்டு பிடிப்பைப் பாராட்டவோ என்னவோ
எந்த ஆறுமுக நாவலர்களும் வாய்திறக்கவில்லை
தேவாரம்
தும்மல், இருமல் நீக்கும்
வயிற்றுவலி போக்கும்
கூன் நிமிர்த்தும், விஷமும் இறக்கும்
என்றெல்லாம் தெரியும்,
சீருமா அழிக்கப் போகிறது ? ( அரசியல் வாதிகளின் . . .?)
இலாட்டரியால், கள்ளால்
டாஸ்மாக்கால் சீரழிந்த தமிழனை
இன்னும் நல்லாச் சீரழிக்க
தெருவுக்கு நாலு தேவாரப் பள்ளி
திறக்கலாம்தான்,
திறந்தால் யாருக்கு என்ன கமிஷனா கிடைக்கப் போகிறது ?
கமிஷன் தராதவர்களை எல்லாம்
களை எடுத்துப் பழகியவர்கள்,
இலக்கியத்திலும் செய்யப் போந்தால்
பெரியார் சிந்தனைகளும்,
பாரதி தாசன் பாடலும்,
வைரமுத்து கவிதைகளும்தான்
தமிழ் இலக்கியத்தில் மிஞ்சி இருக்கும் . . .
இருண்டு கிடந்த தமிழை
வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த தேவாரம்
தமிழ் இசையில் ஒரே களப் பாடலாக இருப்பது தேவாரம்
வெறும் நூலாக இருப்பதால்தான்
இவர்களும் நூல் விடுகிறார்கள் போலும் !
This post has been edited by மகுடதீபன்: Today, 02:55 AM
——————–
