( கவிதையும் படமும் – மகுடதீபன் ) வாடகை வீடு கிடைத்தது அதிலே வசித்தேன் சில காலம் வாடிய தெல்லாம் சொலமுடி யாது வாழ்வே அலங்கோலம் இடிந்து விழுந்தது நீர் ஒழுகியது இளைத்தேன் சிலகாலம் பொடிந்தது நொறுங்கிப் போனது வெளியே புலம்பிய தொருகாலம் இன்னொரு வீடு கட்டித் தாப்பா என்றேன் ஒருவாறு சொன்னதற் காகக் கொடுத்தான் வீட்டுச் சுவரோ இடிபாடு இரண்டே பில்லரில் எழுப்பிய வீடு எத்தனை குறைபாடு அரண்டேன் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து ஆயினும் உயிரோடு [...]