இருளில் ஆழ்ந்திருந்தது என்வீடு. எதிரே மின் கம்பத்தில் ப்யூஸ் போச். எதிர்த்த வீட்டை எட்டிப் பார்த்தேன். அப்பாடா ! அங்கும் கரண்ட் இல்லை . . . மாலையில் வந்த EB லைன்மேன் மளமளவென்று கம்பம் ஏற இரண்டு வீட்டிலும் எரிந்தது விளக்கு. ”பெரியவுகளே . . !” எனப் பெருங்கும்பிடு போட எதிர் வீட்டுப் பெரியவர் ஈந்தார் நூறு. எனக்கும் கூட இரண்டு சலாம் கிடைத்தது நானும் போட்டேன் சலாம் மட்டும்! ‘அட அற்பப் புழுவே [...]