
வயிற்றுப் பிழைப்பு
(நாற்காலியில் ஒரு அல்சேஷன் இருக்கிறது.
தெரியவில்லை என்றால் மேலதிகாரிக்குப் பயப்படாதவர் நீங்கள்)
குழந்தையின்
ஹோம் வொர்க் நோட்டில்
பாரதியின்
அச்சமில்லை . . . அச்சமில்லை . . .
பாடலைச் சொல்லித் தந்து விட்டு,
லேப் டாப்பை திறந்து
வீடு வரை சுமந்து வந்த
அலுவலகப் பணியின் ஹோம் வொர்க்கை முடித்தேன்
எங்கே, நாளைய மீட்டிங்கில்
மேலதிகாரி
கடித்துக் குதறி விடுவாரோ
என அஞ்சி . . .!