கலெக்டரிடம் மனு தந்தோம்
கரடான வீதியில் ரோடு வேண்டி . . .!
ரோடு வந்தது.
கடவுளிடம் மனுப் போட்டோம்
காய்ந்த நிலத்தில் மழை வேண்டி . . .!
அன்றிரவே மழை கொட்டியது
காலையில் கண்விழித்தால்
காணாமல் போச்சு ரோடு கரைஞ்சு . . .!
ஆயின் இது காண்ட்ராக்ட் காரர் தப்பில்லை
அவர் என்னவோ,
ஆளைப் பிடித் தார்,
டெண்டர் எடுத் தார்,
கட்டிங் முடித் தார்
கமிஷன் கொடுத் தார்
இவ்வளவு தார் இருக்கும் போது
ரோட்டிலே எதற்குத் தார் ?
அவர்மேல் தப்பா ?
கடவுளிடம் மனுப் போட்டதுதான் தப்போ ?