பாவி

பா வி

அரசு செலவில்
அரசு அலுவலகத்தில்
அரசு மொழி பற்றி ஆய்வு எனும் போர்வையில் வந்து
அல்ட்டாப் செய்து மஞ்சக் குளிக்கும்
ஆறு மக்கள் பிரதிநிதிகளின் மனமகிழ் சுற்றுலா . . .!

இது அக்கினி தீர்த்தம்
மனிதன் செய்யும்
இருபத்தேழு வகைப் பாவங்களும்
இதில் நீராடத் தீரும் . . .!

இராமேச்சுவரத்தில் விளக்கினார் வழிகாட்டி.

அதாவது ரோடு போட்டதில்
கமிஷன் வாங்கிய பாவம் தீர . . .

என எமலோகத்தில் உறுமினான் எமதர்மன் !
யார் அங்கே,
இவர்களுக்கு ஆறாய் பொங்கும் 6
கொதிக்கும் தார்க்
கொப்பரைகள் வையுங்கள்
குளிப்பாட்டினால்தான் பாவம் தீரும் . . .!

ஆறாவது கொப்பரை யாருக்கோ ?

- கேட்டான் கிங்கரன்

தப்புத் தப்பாய் வழிசொன்ன
வழிகாட்டிக்கு . . .!

எனக் கர்ஜித்தான் நீதி தேவன் . . .

மகுடதீபன் நிலாமுற்றம்

One Comment


RSS Feed for this entry

Leave a Comment